பழிக்குப்பழியாக பயங்கர சம்பவம் - 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது

சேலம் அருகே பழிக்குப்பழியாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது

Update: 2021-12-21 12:57 GMT
சேலம் அருகே பழிக்குப்பழியாக இளைஞர் வெட்டிக் கொலை  செய்யப்பட்ட சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சேலம் அருகே நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் கடந்த 17 ம் தேதி இரவு 15 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சரவணன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வந்தது. விசாரணையில் 
கடந்த 2019ல் திலீப்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருப்பது உறுதியானது. 
இதையடுத்து கொலையாளிகளான 2 சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்