2022 பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை வருகிற பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்

Update: 2021-12-21 11:39 GMT
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை வருகிற பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளதைத் தொடர்ந்து, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 

இதையொட்டி, புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், வார்டுகள் வரையறை செய்யப்பட்டு, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 

மேலும், தேர்தல் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணையை ஜனவரி 3வது வாரத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்,...

இதன்படி, பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தலை நடத்த அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்