லாரி ஓட்டுனரை கட்டிப்போட்டு கொள்ளை... ஆறரைக் கோடி மதிப்புள்ள செல்போன் கொள்ளை

லாரி ஓட்டுனரை கட்டிப்போட்டு கொள்ளை... ஆறரைக் கோடி மதிப்புள்ள செல்போன் கொள்ளை

Update: 2021-08-08 10:59 GMT
லாரி ஓட்டுனரை கட்டிப்போட்டு கொள்ளை... ஆறரைக் கோடி மதிப்புள்ள செல்போன் கொள்ளை

பெங்களூரு அருகே லாரி ஓட்டுனரை கட்டிப்போட்டு ஆறரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் உள்ள பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து சுமார் ஆறரைக் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய செல்போன்களை கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலுள்ள குடோனுக்கு லாரி மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த 6-ம் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட்ட இந்த லாரியை உமேஷ் என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார். லாரி பெங்களூரு அருகே நுழையும் போது,  காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் வழிமறித்துள்ளனர். ஓட்டுனரை  அருகே இருந்த வயலுக்கு இழுத்துச் சென்று கட்டிப்போட்டுவிட்டு தாக்கி விட்டு, லாரியில் இருந்த ஆறரை கோடி மதிப்புள்ள புதிய செல்போன்களில் அந்த கும்பல் கொள்ளையடித்து சென்று விட்டது.சுய நினைவு திரும்பிய பின், லாரி ஓட்டுனர் இந்த கொள்ளை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கு முன்பு இது போன்ற ஒரு கொள்ளை நடந்திருப்பதால், வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் இதில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார்  சந்தேகிக்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்