நெஞ்சை துளைக்கும் கேள்வியை கேட்ட ஐகோர்ட் - ஆடிப்போன அதிகாரிகள்

Update: 2024-10-22 06:20 GMT

சிறிய குற்றங்களுக்காக, கடைநிலை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலையில், உயர் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.வேலூர் சிறையில் ஆயுள் கைதி ஒருவரை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கிய வழக்கில், சிறைத்துறை டிஐஜி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் சிபிசிஐடி எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்தார்.வீட்டுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சிறை கைதிகள் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டிஐஜி உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினர்.சிறிய குற்றங்களுக்காக, கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையில், உயர் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என கேட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்