"தலைநகரில் இருந்து தொடங்குவோம்" - உச்சநீதிமன்றம் அதிரடி

Update: 2024-10-22 06:18 GMT

பயிற்சி மையங்கள் பாதுகாப்பாக இயங்க, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

டெல்லி பழைய ராஜேந்தர் நகரில், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் ஜூலை 27-ஆம் தேதி மழைநீர் புகுந்து மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பயிற்சி மையங்களின் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அப்போது, மூத்த வழக்குரைஞர் சித்தார்த் தவேவின் அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், பயிற்சி மையங்கள் பாதுகாப்பாக இயங்க விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றனர். பயிற்சி மையங்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்றனர். முதல் கட்டமாக தலைநகரில் இருந்து தொடங்குவோம் எனக்கூறி, விசாரணையை நவம்பர் 18-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்