கோயில் நிலம் அபகரிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மீது புகார்... வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி
சிவகங்கையில் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதோடு நிலத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோயில் நிலம் அபகரிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மீது புகார்... வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி
சிவகங்கையில் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதோடு நிலத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.சிவகங்கையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ கௌரி விநாயகர் கோயிலுக்கு சொநத்மான 9 ஏக்கர் 58 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த ஆக்கிரமிப்பை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்கள் செய்ததாகவும் உரிய நடவடிக்கை கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதன் பேரில் விசாரணை நடத்திய வருவாய்த்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்றதோடு ஆக்கிரமிப்பு நிலத்தில் நடந்த கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த இடத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.