தென்காசியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு பரிசீலனை செய்யப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தென்காசியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு பரிசீலனை செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

Update: 2021-05-27 06:08 GMT
தென்காசியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு பரிசீலனை செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகளில், திரவ ஆக்சிஜன் கிடங்கு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்