"நீட்-கூடுதல் மையங்கள் அமைக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு எழுத கூடுதல் மையங்கள் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-03-23 10:50 GMT
நீட் தேர்வு எழுத கூடுதல் மையங்கள் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கூடுதல் மையங்கள் அமைக்க கோரி விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மற்றும் தேசிய தேர்வு முகமையின் வாதங்களை தலைமை நீதிபதி அமர்வு கேட்டறிந்தது. 
பின்னர் பேசிய நீதிபதிகள், தேர்வு மையங்களை அதிகரிக்க தற்போது உத்தரவு பிறப்பித்தால் அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் என்றனர். மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுதும் வகையில், அடுத்த ஆண்டு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்