மனைவியோடு கள்ளக்காதல் வைத்திருந்த நண்பன் கொலை - உடலை தோண்டி எடுத்து பரிசோதனை

ராணிப்பேட்டை அருகே மனைவியோடு கள்ளக்காதல் வைத்திருந்த நண்பனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-08-31 02:57 GMT
வானாபாடியை சேர்ந்த சசிக்குமாரும் விண்ணம்பள்ளியைச் சேர்ந்த பிரபு லாரன்ஸ்சும் சிறையில் இருந்தபோது நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இருவரும் வெளியே வந்த பின் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த வழக்கில் சசிக்குமார் மீண்டும் சிறைக்கு சென்றுள்ளார். அப்போது சசிக்குமார் மனைவி கீதாவிற்கும் பிரபு லாரன்ஸ்க்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிக்குமாருக்கு இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் பிரபு லாரன்ஸை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். திட்டத்தின் படி லாரன்ஸை வானாபாடி ஓடை கால்வாய்க்கு  அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்தியபோது பீர் பாட்டியால் லாரன்ஸை தாக்கி சசிக்குமார் கொலை செய்தார். யாருக்கும் தெரியாமல் மறைக்கும் வகையில் ஓடைக்கு அருகிலேயே குழி தோண்டி உடலை புதைத்துள்ளார். இதன் பிறகு வழக்கு ஒன்றில் சசிக்குமாரை போலீசார் மீண்டும் கைது செய்து விசாரித்தனர்.அப்போது இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.  இதனையடுத்து உடல் புதைத்த இடத்தை சசிகுமார் அடையாளம் காட்ட, பிரபு லாரன்ஸ் உடல் வாலாஜா வட்டாட்சியர் பாக்கியநாதன் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர்  பிரேத பரிசோதனைக்கு பின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்