சேலம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
சேலம் அரசு பொது மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் கொரோனா வழிகாட்டுதல் மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
சேலம் அரசு பொது மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் கொரோனா வழிகாட்டுதல் மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். பின்னர், கொரோனா பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டா அவர், மருந்துகள் இருப்பு மற்றும் வெண்டிலேட்டர்கள் பயன்பாடு எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து, மருத்துவர்களுடனான ஆய்வு கூட்டத்தில், பங்கேற்று அனைவரும் பணியை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளமாறும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் பேசினார்.