மூட்டை மூட்டையாக போதைப் பொருட்கள் - ஆவடியில் 25 டன் குட்கா பொருள் பறிமுதல்

ஆவடி அருகே மூட்டை மூட்டையாக 25 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-08-21 09:20 GMT
ஆவடி அடுத்த காட்டூர் சிட்கோவில் குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து  குற்ற நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி குமரன் தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். இதில் காட்டூர் சிப்காட்டில் உள்ள குடோன் ஒன்றில், 2 கண்டெய்னர் மற்றும் 3 லோடு வாகனங்களில் மூட்டை மூட்டையாக 25 டன் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், குடோன் உரிமையாளர் பாலாஜி உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். மேலும் குட்கா கடத்தலில் ஈடுபட்ட காரனோடை முருகனை வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு 2 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வருவது போல் கன்டெய்னர் லாரிகளில் வாகன எண்ணை மாற்றி கடத்தி வந்ததும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்