"காலத்தின் கட்டாயம்" - மத்திய அமைச்சர் எல்.முருகன்

Update: 2024-09-21 17:11 GMT

நாட்டின் வளர்ச்சிக்காக ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் என மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வருகை தந்த அவர் யாகம் வளர்த்து வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமானது கல்வியாளர்கள், நீதிபதிகள், துணைவேந்தர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் கருத்து கேட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இது காலத்தின் கட்டாயம் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்