உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹிரிர் அமைப்பு தொடர்பாக, என்.ஐ.ஏ. அதிகாரிகள் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இரண்டாவது வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ராயப்பேட்டையை சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர் உள்ளிட்ட ஆறு பேரை, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி கஸ்டடியில் எடுத்து விசாரித்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், பல்வேறு தகவல்களை பெற்றனர். இதன்பேரில், முதல் வழக்கில் கைதான தஞ்சையை சேர்ந்த அப்துல் ரகுமான், முஜிபுர் ரகுமான் மற்றும் பெங்களூரு விமான நிலையத்தில் கைதான அஜீஸ் அகமது ஆகிய மூன்று பேரை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஐந்து நாட்கள் காவலில் எடுத்துள்ளனர். இவர்களிடம் தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.