"ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுங்கள்" - சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2020-08-18 07:54 GMT
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, குமரெட்டியாபுரத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்தும், ஆலையை திறக்க அனுமதி வழங்கக் கோரியும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இறுதிகட்ட விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.  815 பக்க தீர்ப்பு அறிக்கையை வாசித்த நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டனர். தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது செல்லும் என்று கூறிய நீதிபதிகள், வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர். அப்போது குறுக்கிட்ட வேதாந்தா தரப்பு வழக்கறிஞர், 2 வாரம் தற்போதைய நிலை நீடிக்க கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், இடைக்கால கோரிக்கையை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்