ராணிப்பேட்டையில் 599 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 599 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 599 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் ஏற்கனவே ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கையும் 599 ஆக அதிகரித்துள்ளது. எனவே அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.