குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : 5-வது நாளாக கறம்பக்குடியில் தொடரும் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஐந்தாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-02-23 18:49 GMT
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு  எதிராக இஸ்லாமியர்கள் ஐந்தாவது நாளாக  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கறம்பகுடி மதரஸா பள்ளிவாசல் அருகே நடைபெற்று போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் இந்த சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என  சட்டமன்றத்தைக் கூட்டி சட்டம் நிறைவேற்ற வேண்டும் என​வும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

திருவாரூர் : "குடியுரிமை சட்டத்திற்கு எதிரான விளக்க பொதுக் கூட்டம்"



திருவாரூரில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் "குடியுரிமையும் குடிமக்களும்" என்ற தலைப்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் தலைவர் மைதீன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முறைபடி  கொண்டு வராத தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக விலக்க வேண்டும், தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று அ.தி.மு.க. அறிவிக்காவிட்டால், வருங் காலங்களில் அக்கட்சியை புறக்கணித்தல் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்