"5,8ஆம் பொதுத் தேர்வு நடப்பது உறுதி, மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம்" - கல்வித்துறை ஆணையர் விளக்கம்
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் ஆணையை சுட்டிக்காட்டி, மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
40 மதிப்பெண்கள் செய்முறைத் தேர்வாகவும் , 60 மதிப்பெண்கள் எழுத்து தேர்வாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறனை சோதிப்பதற்காகவே தேர்வு நடத்தப்படுகிறது என தாமஸ் வைத்தியன் தெரிவித்துள்ளார்.