நாகப்பட்டினம் : மஸ்கட் மன்னருக்கு ஃபிளக்ஸ் போர்டு வைத்து அஞ்சலி
மறைந்த ஒமான் நாட்டு மஸ்கட் மன்னர் சுல்தான் காபூல் பின் சயித்திற்கு நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பிளக்ஸ் பேனர் வைத்து ஓய்வு பெற்ற ஆசிரியர் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த ஒமான் நாட்டு மஸ்கட் மன்னர் சுல்தான் காபூல் பின் சயித்திற்கு நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பிளக்ஸ் பேனர் வைத்து ஓய்வு பெற்ற ஆசிரியர் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். சீனுவாசபுரத்தை சேர்ந்த அசோகன் என்பவர் 1997 முதல் 2008 வரை ஓமன் நாட்டில் வேலை செய்து குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அப்போது, ஜாதி மத பாகுபாடின்றி அனைத்து வசதிகளையும் பெற்றதாகவும், சுகாதாரம் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க பெற்றதாக அசோகன் கூறினார். இதற்கு மரியாதை செலுத்தும் விதமாக பிளக்ஸ் போர்டு வைத்ததாக அவர் தெரிவித்தார்.