மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி அலுவலகத்தில் சோதனை - கணக்கில் வராத ரூ.1.20 லட்சம் பணம் பறிமுதல்

பண்டிகை காலங்களில் அரசு அலுவலகங்களில் பரிசுப் பொருட்கள் மற்றும் லஞ்சப் பணம் பெறுவதை தடுக்க 2 வாரங்களாக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2019-10-25 11:15 GMT
பண்டிகை காலங்களில் அரசு அலுவலகங்களில் பரிசுப் பொருட்கள் மற்றும் லஞ்சப் பணம் பெறுவதை தடுக்க 2 வாரங்களாக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சார்பதிவாளர், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள வடசென்னை மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனை நடைபெற்றது. தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் நடந்த சோதனையில்,  மாவட்ட தீயணைப்பு அதிகாரி ராஜேஷ் கண்ணன் என்பவரிடம் கணக்கில் வராத ஒரு லட்சத்து இருபதாயிரம் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. அங்கிருந்து பட்டாசு மற்றும் இனிப்பு  பெட்டிகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன. ராஜேஷ் கண்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்