பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருகை - பல ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரம் மரகத பூங்கா சீரமைப்பு

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி சுற்றுலாத் துறை சார்பில் பசுமை புல்வெளி பூச்செடிகளுடன் மாமல்லபுரம் மரகத பூங்கா சீரமைப்பு தீவிரமாக நடைபெறுகிறது.

Update: 2019-10-02 02:05 GMT
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகையையொட்டி, சுற்றுலாத் துறை சார்பில் பசுமை புல்வெளி, பூச்செடிகளுடன் மாமல்லபுரம் மரகத பூங்கா சீரமைப்பு தீவிரமாக நடைபெறுகிறது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில் உள்ளிட்ட பாரம்பரிய நினைவு சின்னங்களை இரு நாட்டு தலைவர்களும் சுற்றிப் பார்த்து அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும், இருவரும் புகைப்படமும் எடுக்கவும் உள்ளனர். இதனால், பாதுகாப்பு கருதி, அங்கிருக்கும் செல்போன் கோபுரத்தை அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. சிசிடிவி கேமரா பொருத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், பல ஆண்டுகளாக கேட்பாரற்று இருந்த மரகத பூங்கா, பசுமை புல், பூந்தொட்டி, நடைபாதை என அனைத்தும் தற்போது தயாராகி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்