ஆள் மாறாட்டம் செய்த மாணவர் இர்ஃபானின் தந்தை கைது

ஆள் மாறாட்டம் செய்த மாணவர் இர்ஃபானின் தந்தை முகமது சஃபி, கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-09-29 18:32 GMT
மாணவர் இர்ஃபான் கடந்த 6 ஆம் மொரிஷியஸ் நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளனர்.அவரது தந்தை முகமது சஃபி வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூரில் கிளினிக் நடத்தி வருகிறார்.இந்நிலையில், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட வழக்கில் கைதான ராகுல் அவருடைய தந்தை டேவிட் ஆகிய இருவரையும் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வத்தின் முன் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ராகுல் மற்றும் டேவிட்டுக்கு 12 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார் இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட தேக்கம்பட்டியில் உள்ள மத்திய சிறையில் ராகுல் மற்றும் அவருடைய தந்தை டேவிட் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில், தேனியில் உள்ள சிபிசிஐடி போலீசாரிடம் சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர் பிரேம்நாத் பக்கிரியா ஆஜரானார். அவரிடம் நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்