3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - டிரஸ்ஸை கழட்ட சொன்ன தலைமை ஆசிரியர்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராகச் செங்கல்வராயன் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கு மாணவி ஒருவருக்குக் கழிவறையில் வைத்து செங்கல்வராயன் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி தன்னுடைய ஆடைகளை தலைமை ஆசிரியர்
கழற்றச் சொன்னதாகக் கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து செங்கல்வராயன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனப் பெற்றோர்கள் தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் தலைமை ஆசிரியர் செங்கல்வராயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.