தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் - தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை

ஜி.எஸ்.டி. கூட்டத்தில் வரி குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது- தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்-தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை

Update: 2019-09-25 07:31 GMT
தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் மாநில தலைவர் சுரேஷ், தீப்பெட்டிக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற  கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்தார். ஜி.எஸ்.டி. வரியை குறைத்தால் மட்டுமே தீப்பெட்டி தொழில் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முடியும் என்றும் அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்