தென்காசி பொதிகை புத்தகத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிய மாணவர்கள் சோர்வாகி படுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தென்காசி ஈஸ்வரன் பிள்ளை பள்ளியில் 3வது பொதிகை புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு தென்காசி மாவட்டத்திலிருந்து பேருந்துகள் மூலம் அரசு மற்றும் தனியார் பள்ளியிலிருந்து ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் மாணவர்களை பார்வையிட அனுமதியளித்ததால் மாணவர்களுக்கிடையே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் மூச்சு விடக்கூட முடியாத சூழல் ஏற்பட்டதால், வெளியேறிய மாணவர்கள் சோர்வாகி படுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
எனவே, கூட்டரங்கில் போதிய காற்றோட்ட வசதிகளை செய்வதுடன், மாணவர்களை முறைப்படி அனுமதிக்க வேண்டும் என பார்வையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.