"சர்க்கரை ஆலை சொத்து பறிமுதல் செய்ய வேண்டும்" - பி.ஆர். பாண்டியன்
விவசாயிகளுக்கு தெரியாமல் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் பெயரில் 400 கோடி ரூபாயை வங்கிக் கடனாக பெற்ற ஆரூரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் தியாகராஜன் மீது வழக்கு பதிந்து கைது செய்யுமாறு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
விவசாயிகளுக்கு தெரியாமல் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் பெயரில் 400 கோடி ரூபாயை வங்கிக் கடனாக பெற்ற ஆரூரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் தியாகராஜன் மீது வழக்கு பதிந்து கைது செய்யுமாறு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் தமிழக அரசுக்கு நன்றி மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சர்க்கரை ஆலைக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து விவசாயிகளின் கடன்களை அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.