போலி ஆவணங்கள் தயாரித்து சொத்து அபகரிப்பு : 2 பேருக்கு 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

திருப்பூரை சேர்ந்த சுப்ரமணி என்பவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை, அவரது மறைவுக்கு பின் சிலர் அதை அபகரிக்கும் வகையில் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர்.

Update: 2019-09-11 22:45 GMT
திருப்பூரை சேர்ந்த சுப்ரமணி என்பவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை, அவரது மறைவுக்கு பின் சிலர் அதை அபகரிக்கும் வகையில் போலி ஆவணங்கள்  தயாரித்துள்ளனர். இது தொடர்பாக சுப்ரமணியின் மகன் மதியழகன் அளித்த புகாரை விசாரித்த சிஐடி போலிசார், ராமசாமி, ஜனார்தனன் ஆகியோரை  கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, இருவரையும், 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால், சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான ராமசாமி என்பவர் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் உறவினர் ஆவார். 

Tags:    

மேலும் செய்திகள்