ராமேஸ்வரம் : கடலில் மூழ்கி இறந்த 4 மீனவர்கள் - குடும்பத்தினரை சந்தித்த எம்.எல்.ஏ மணிகண்டன்
ராமேஸ்வரத்தை அடுத்த நடராஜபுரத்தில், கடலில் மூழ்கி இறந்த 4 மீனவர்களின் குடும்பத்தினரை, எம்.எல்.ஏ மணிகண்டன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ராமேஸ்வரத்தை அடுத்த நடராஜபுரத்தில், கடலில் மூழ்கி இறந்த 4 மீனவர்களின் குடும்பத்தினரை, எம்.எல்.ஏ மணிகண்டன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், தனது சொந்த பணத்தில் இருந்து தலா 50,000 ஆயிரம் ரூபாய் வீதம் 4 குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்தார். அப்போது, மீனவப் பெண்கள் கண்ணீர் மல்க அவரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர். பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் அரசு நிதி வழங்க ஏற்பாடு செய்வதாக எம்.எல்.ஏ மணிகண்டன் உறுதி அளித்தார்.