கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறப்பு : அணையின் நீர்மட்டம் 73 அடியாக உயர்வு

கர்நாடகா அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 73 புள்ளி 60 அடியாக உள்ளது.

Update: 2019-08-12 02:04 GMT
கர்நாடகா மற்றும் கேரளாவில் பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளில் இருந்து சுமார் 2 லடசத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. அணைக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 73 புள்ளி 60 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த 4 நாட்களில் மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்