மாமூல் வசூலிக்கும் காவல்துறையினருக்கு எச்சரிக்கை : லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்
மாமூல் வசூலிக்கும் காவல்துறையினருக்கு எச்சரிக்கை/"லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ராமசாமி என்பவர் தொடுத்த வழக்கில், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தமிழகத்தில் போலீசார் பொது இடங்களில் மாமுல் வசூலிப்பது அனைவரும் அறிந்தது தான் என்றும் தேசிய நெடுஞ்சாலைகள், போலீஸ் நிலையங்கள், வணிக மையங்கள், கடைகளில் மாமுல் வசூலிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். அரசு பொது ஊழியர் நன்னடத்தை மற்றும் ஒழுக்கத்தை மீறுவது சட்டப்படி குற்றமாகும் என்று தெரிவித்த அவர், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி உள்ள டிஜிபி திரிபாதி, ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.