ஆட்டோமொபைல் உதிரிபாக தொழில் குறித்த அரசாணைக்கு தடை : தொழிற்சங்கம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணை

ஆட்டோ மொபைல் உதிரிபாக தொழிலை பொதுப் பயன்பாட்டு சேவையாக அறிவித்த, தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-08-02 13:03 GMT
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் அரசாணையை ரத்து செய்யக்கோரி கோவையை சேர்ந்த தொழிலாளர் சங்கம் சார்பில், வழக்கு தொடரப்பட்டது.  இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட பொதுமக்களின் நலன்சார்ந்த சேவைகளை மட்டுமே, பொதுப்பயன்பாட்டு சேவையாக சட்டத்தில் வரையறுக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழக அரசின் அரசாணை சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. முறையீட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறிய நீதிபதி, அரசாணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்