அத்திவரதர் பாதுகாப்பு : எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை - உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நிகழ்ச்சியில், 4 பக்தர்கள் உயிரிழந்த சூழலில், எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை - தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-07-20 23:52 GMT
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நிகழ்ச்சியில், 4 பக்தர்கள் உயிரிழந்த சூழலில், எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை - தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அத்திரவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்து, அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்