100 அடி ஆழ குழியில் குளித்த சுற்றுலா பயணிகள் : அனுமதி அளித்தது யார் என விசாரிக்க கோரிக்கை

நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு அருவியின் அருகே உள்ள நூறு அடி ஆழ பள்ளத்தில், ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் குளிக்க அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2019-07-19 22:10 GMT
நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு அருவியின் அருகே உள்ள நூறு அடி ஆழ பள்ளத்தில், ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் குளிக்க அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த பல நாட்களாக சுற்றுலா பயணிகள் யாரும் மணிமுத்தாறு அருவியில் குளிக்க  அனுமதிக்கப்படவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமையன்று, ஆண்களும் பெண்களும் என, ஐந்திற்கும் மேற்பட்டோர் குளித்துள்ளனர். இதற்கு அனுமதி அளித்தவர்கள் யார் என்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
Tags:    

மேலும் செய்திகள்