மீது லஞ்சக் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என அதானி குழுமம் தெளிவுபடுத்தியுள்ளது.இந்தியாவின் பெரும் தொழிலதிபர் கௌதம் அதானி, அவரின் மருமகன் சாகர் அதானி மற்றும் மூத்த நிர்வாகி வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்காவில் லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலை
அதானி குழுமம் மறுத்துள்ளது. அமெரிக்க நீதித்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையிலோ அல்லது பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் சிவில் புகாரிலோ தனிநபர்கள் யாரும் பெயரிடப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஊடகங்களின் அறிக்கைகள் தவறானது என அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீறுவதில் அதன் இயக்குநர்கள் ஈடுபடவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் FCPAவை மீறியதாகக் குற்றம் சாட்டப்படவில்லை என தெரிவித்துள்ளது.