அதிக விலை கொடுத்து 2 முறை வெயிட் லாஸ் பவுடர் ஆர்டர்... நேரில் வந்ததை கண்டு அதிர்ந்த சென்னை நபர்

Update: 2024-11-28 04:44 GMT

சென்னை திருவெற்றியூரில் ஆன்-லைனில், எடை குறைப்பு பவுடரை ஆர்டர் செய்தவருக்கு, கோதுமை மாவு பார்சல் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருசினானகுப்பம் பகுதியை சேர்ந்த வசந்த்ராஜன் 5 ஆயிரத்து 600 ரூபாயை கட்டி எடை குறைப்பு பவுடரை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு அரிசி மாவு வந்துள்ளது. மீண்டும் ஆர்டர் செய்து கேஷ் ஆன் டெலிவரி போட்டுள்ளார். அப்போது கோதுமை மாவு வர ஆத்திரத்தில் தனியார் ஆன்-லைன் நிறுவன சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார். சரியான பதில் கிடைக்காத நிலையில் வசந்தராஜன் கொடுத்த புகாரில் திருவெற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்