சிறையில் இருந்து நைஜீரியன் தப்பியோட்டம் : தீவிரமாக தேடி வரும் போலீசார்

கடும் பாதுகாப்பு நிறைந்த திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளிநாட்டு கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-07-19 22:02 GMT
கடும் பாதுகாப்பு நிறைந்த திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளிநாட்டு கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சிறையில், உள்ள சிறப்பு அகதிகள் முகாமில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கை, நைஜீரியா, ரஷ்யா உள்ளிட்ட 46 வெளிநாட்டினர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில், நைஜீரியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன் என்பவர், தப்பியோடினார். இது குறித்து கே.கே நகர் போலீசார் வழக்குப் பதிந்து, ஸ்டீபனை தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்