மதுரையில் விசாரணைக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர் மரணம்

மதுரையில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மர்ம‌மான முறையில் உயிரிழந்தார்.

Update: 2019-06-29 12:40 GMT
மதுரையில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், மர்ம‌மான முறையில் உயிரிழந்தார். மதுரை பழங்காந‌த்தம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரிப்பதற்காக, போலீசார் மணிகண்டனை காவல்நிலையம் அழைத்து சென்ற நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென மணிகண்டனுக்கு உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவரை போலீசார் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு , மணிகண்டனை பரிசோதித்த‌ மருத்துவர்கள் வழியிலே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உறவினர்கள், போலீசார் அடித்துகொன்றுவிட்டதாக குற்றம்சாட்டி போலீசாருடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்