கொஞ்சம் கூட கருணை காட்டாத மழை.. கொத்து கொத்தா கிடக்கும் டெல்டாவின் உயிர்

Update: 2024-11-28 06:58 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அத்திக்கோட்டை கிராமத்தில் நடவு செய்து 30 நாட்களே ஆன 500 ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வயல்வெளிகள் அனைத்தும் கடல்போல் காட்சி அளிக்கும் நிலையில், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி ஒருவர் பாட்டுப் பாடி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்