கடந்த ஆகஸ்ட் மாதம் உதகை நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்ற ஜஹாங்கீர் பாஷா, பல்வேறு விதிமீறல்களுக்கு பணம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த 9ஆம் தேதி தனியார் வாகனத்தில் சென்று பலரிடம் பணப்பைகளை வாங்கிக்கொண்டு சென்ற ஜஹாங்கீர் பாஷாவை, தொட்டபெட்டா சாலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரை சோதனை செய்தபோது, கணக்கில் வராத 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சிக்கியது. இதையடுத்து, எதற்காக பணம் வாங்கப்பட்டது என்ற வாக்குமூலத்தை பெற்று, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து காத்திருப்பு பட்டியலுக்கு ஜஹாங்கீர் பாஷா மாற்றப்பட்டார். இந்நிலையில், அவருக்கு நெல்லை மாநகராட்சி துணை ஆணையராக பணி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.