சட்ட விரோத ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கு : தலைமை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
குமரி மாவட்டம், களியல் கிராமத்தில் ஊரணியில் உள்ள சட்ட விரோத ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக தலைமை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குமரி மாவட்டம், களியல் கிராமத்தில் ஊரணியில் உள்ள சட்ட விரோத ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக தலைமை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. களியல் கிராமத்தை சேர்ந்த பிஜுலால் என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், வழக்கை ஜூலை 5 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.