தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆலோசனை
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் உச்சத்தில் உள்ள நிலையில் சென்னையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் உச்சத்தில் உள்ள நிலையில் சென்னையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பலரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சுமார் 22க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வறட்சி பாதிப்புக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில், குடிநீர் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலர் ஹர்மேந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் வாரிய இயக்குநர் மகேஸ்வரன், சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய இயக்குநர் ஹரிஹரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் வேலுமணி, குடிநீர் பற்றாக்குறை குறித்து வரும் புகார்கள் மீது அதிகாரிகள் அலட்சியமாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.