கோவையில் செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் கைது
கோவையில் நகை கொள்ளை செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கோவை அருகே உள்ள பேரூர் போஸ்டல் காலனியை சேர்ந்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் ராஜகோபால் என்பவரது வீட்டில் கடந்த மாதம் 26-ம் தேதி 80 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோல் கடந்த 2-ம் தேதி சந்திர புஷ்பம் என்பவரின் 6 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். வழக்கில் தொடர்புடைய கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், 6 பேர் கொண்ட கும்பல் இதுபோல் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒரு கார் 50 பவுன் நகை, 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 6 பேரையும் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.