"இயற்கை பேரிடரில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்ப​டி?" - அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல் விளக்க பயிற்சி

தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும், கடற்கரையோர கிராம மாணவர்களுக்கு பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்த பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.

Update: 2019-06-12 18:27 GMT
தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும், கடற்கரையோர கிராம மாணவர்களுக்கு பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்த பயிற்சி இன்று அளிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சித் துறை மாநில பயிற்சியாளர் தாமோதரன், பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்தும்,  பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முதலுதவி அளித்து காப்பாற்றுவது குறித்தும்  செயல் விளக்க பயிற்சி அளித்தார். மேலும் பேரிடர் தொடர்பாக வருவாய் துறையினர் வெளியிட்ட குறும்படத்தின் உதவியுடன், பேரிடர் மீட்பு குறித்த பயிற்சியும் அளித்தார். இந்த செயல் விளக்கப் பயிற்சி பயனளிக்கும் விதத்தில் அமைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்