"கலெக்டர் ஆபீசில் இப்படி ஒரு சம்பவமா?" - அதிரடி ரெய்டில் இறங்கிய அதிகாரிகள் கொடுத்த வார்னிங்

Update: 2024-11-08 05:17 GMT

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கெட்டுப்போன வடை வழங்கியதாக கேன்டீனுக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆட்சியர் அலுவலக கேன்டினில் வடைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து மீண்டும் அடுத்த நாள் வழங்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் கெட்டுப்போன வடை இருந்தது தெரியவர, கேன்டீன் நிர்வாகத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்