தமிழ்நாடு சுகாதார துறைக்கு சிறப்பு திட்டம் : ஜூலை மாதம் தொடக்கம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழ்நாடு சுகாதாரத்துறை சிறப்பு திட்டம் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை சிறப்பு திட்டம் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த திட்டத்தை செயல்படுத்த உலக வங்கி 2 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழக அரசு 857 கோடி ரூபாயும் வழங்க உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் சுகாதாரத்துறை சிறந்து விளங்குவதால் உலக வங்கி இந்த நிதியை வழங்குவதாகவும், இந்த திட்டத்தின் மூலம், கர்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட 50 நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.