பார் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு : ஆய்வாளர் பணியிட மாற்றல் உத்தரவு ரத்து

பார் உரிமையாளர் தற்கொலை வழக்கில் மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் மீதான பணியிட மாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இருவரும் மீண்டும் பணியில் சேர்ந்தனர்.

Update: 2019-06-03 14:02 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பகுதியை சேர்ந்த நெல்லையப்பன் என்பவர், போலீஸார் மாமூல் கேட்டு தொந்தரவு செய்வதாகக் கூறி, கடந்த 29-ஆம் தேதி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு பதிவு செய்த வீடியோவில் மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்புராஜ், திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன், கேளம்பாக்கம் ஆய்வாளர் பாண்டி மற்றும் அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்த்துக்கு லஞ்சம் பணம் கொடுத்தது தொடர்பாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து, டி.எஸ்பி. சுப்புராஜ், காவல் ஆய்வாளர்கள் கண்ணன், பாண்டி, உள்ளிட்டோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். மேலும், மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிகுமார், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆயுதப்படை பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். தற்போது, உயரதிகாரிகள் விசாரணையில் பார் ஊழியர் தற்கொலையில் இந்த இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிய வந்தது. இதையடுத்து, ரவிக்குமார்,  திருநாவுக்கரசு மீதான பணியிட மாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இருவரும் மாமல்லபுரத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்