மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணி தாமதம்...

3 நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Update: 2019-05-30 11:48 GMT
3 நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு வரையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 40 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சீருடைகள் இதுவரை தயாராகவில்லை. ஆண்டுக்கு நான்கு ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் முதல் ஜோடி சீருடை தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. சென்னை சாலிகிராமத்தில் நடக்கும் இந்த பணியில் 42 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் 3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களும் இன்னும் தயாராகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அரைகுறை ஏற்பாடுகளுடன் பள்ளிகள் திறப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்