தண்ணீர் வறண்டதால் செத்து கிடக்கும் மீன்கள் : அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் நகராட்சி குளத்தில் தண்ணீர் வறண்டதால் மீன்கள் செத்து மிதக்கின்றன.

Update: 2019-05-08 21:42 GMT
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் நகராட்சி குளத்தில் தண்ணீர். வறண்டதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. அனகாபுத்தூர் நகராட்சிக்கு சொந்தமான குளம்  உள்ளது. இக்குளத்தை சுற்றி பூங்கா அமைத்து அதனை அங்குள்ள அப்பகுதி மக்கள் நடைபயிற்ச்சி செய்து வந்தனர்.இந்நிலையில்  குளம் போதிய பராமறிப்பு இன்றியும், தண்ணீர் இல்லாத காரணத்தால்  குறைந்த அளவு உள்ள நீரில் வாழும் ஆயிரக்கணக்கான மீன்கள்  சூரியனின் வெப்பம் தாங்காமல் இறந்துள்ளன. தற்போது குளத்தில்உள்ள சிறிதளவு தண்ணீரை நம்பி உள்ள வாத்துகள் இறக்கும் அபாயமும் உள்ளது. மீன்கள் இறந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று  பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்