அரசு மருத்துமனையில் பிரசவம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் இல்லை
திருத்தணி அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் இல்லாததால், கடந்த இரு நாட்களில் மட்டும் 15 கர்ப்பிணிகளுக்கு மேல் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருத்தணி அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் இல்லாததால், கடந்த இரு நாட்களில் மட்டும் 15 கர்ப்பிணிகளுக்கு மேல் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருத்தணி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் மருத்துவர்கள் இல்லை என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் ஆய்வு நடத்தி, உரிய மருத்துவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.