பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமன முறைகேடு : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமன முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Update: 2019-04-30 20:05 GMT
சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமன முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பச்சையப்பன் கல்லூரியின் முதல்வராக சேட்டு என்பவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்டிருந்த வழக்கில், முதல்வர் நியமனத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கல்லூரி முதல்வர் சேட்டு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதல்வர் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். இருந்த போதில், இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தடை விதித்ததோடு, வழக்கு விசாரணையை ஜூன் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்