"ஜூன் 12 -ல் மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும்" - விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒன்றிய கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்து விவசாயிகள் வேதனையில் உள்ளதாக கூறினார்.